தேடுதல்

நாங்கள் யார்

‘வத்திக்கான் செய்திகள்’ என்பது, திருப்பீடத்தின் புதிய தகவல் அமைப்பு. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொந்த விருப்பத்தால், 27 ஜூன், 2015 அன்று, திருப்பீட தலைமையகத்தின் புதிய துறையாக, தகவல்தொடர்பு செயலகம் நிறுவப்பட்டது. 

வத்திக்கான் செய்திகள், எளிமையான டிஜிட்டல் கூட்டிணைவு என்ற கருத்தைக்  கடந்து, பதிலளிப்பதற்கும், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இடங்களின்  தொடர்ச்சியான மாற்றங்கள் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புக்குப் பதிலுரைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு பன்முக கலாச்சாரம், பலஅலைவரிசைகள், பன்னூடகம் மற்றும் பன்முக கருவிகள் மட்டத்தில் வெளிப்படுகிறது மற்றும் தொடர்பு கொள்கிறது. திருத்தந்தை, திருப்பீடம், தலத்திருஅவைகள் மற்றும் உலக செய்திகள் பற்றி அறிவிக்கும் நான்கு கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ஆறு மொழி பிரிவுகள் (இத்தாலியம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இஸ்பானியம் மற்றும் போர்த்துகீசியம்) உருவாக்கப்பட்டு,  பின்னர்  33 மொழிகளில் விரிவாக்கப்பட்டு, செய்திகள் வழங்குவதற்கு மட்டும்  அல்ல, நற்செய்தியின் ஒளியில் ஒரு விளக்கமளிக்கும் திறவுகோலாகவும் அமைகின்றது. பல்வேறு கலாச்சாரங்களில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் இரக்கத்தின் நற்செய்தியை அறிவிப்பது திருஅவையின் மறைப்பணிக்கு சவாலாக உள்ளது.

துன்பம், வறுமை, மற்றும் கடின சூழ்நிலைகளில் வாழ்வோர்க்கு, திருஅவையின் சிறப்பு கவனத்தோடு, "திருத்தூது மற்றும், மறைப்பணி இடம்பெற வேண்டும்("4 மே 2017 அன்று SPC ஆண்டு நிறையமர்வு கூட்டத்திற்கு திருத்தந்தை  பிரான்சிஸ் வழங்கிய உரை).  

இத்துறையின் தலைவர் - முனைவர் பவுலோ ருஃபீனி, மற்றும், இத்துறையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

 

வத்திக்கான் செய்தித் தொடர்புத் துறை 

அந்திரேயா தொர்னியெல்லி (ஆசிரியர்) 

செர்ஜோ செந்தோஃபாந்தி (துணை ஆசிரியர்) 

அலெக்சாந்த்ரோ ஜிசோத்தி (துணை ஆசிரியர்)

 

வத்திக்கான் வானொலி மற்றும் செய்திகள் பொறுப்பாளர்

மாசிமிலியானோ மெனிகெத்தி (துணை ஆசிரியர்)