உடன்படிக்கைப்பேழையை சுமக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உடன்படிக்கைப்பேழையை சுமக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 

தடம் தந்த தகைமை – உடன்படிக்கைப்பேழையை சுமக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

தாவீது நகரில் அவர் தமக்கு வீடுகளைக் கட்டினார். கடவுளின் பேழைக்கென ஓர் இடத்தில் ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தார். பின்னர், தாவீது, “கடவுளின் பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குப் பணிவிடை செய்யவும் ஆண்டவர் தேர்ந்துகொண்ட லேவியர் தவிர வேறொருவரும் கடவுளின் பேழையைச் சுமக்கலாகாது” என்றார். ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார். அவ்வாறே, தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.

கோகாத்தின் புதல்வருள் தலைவர் உரியேல், அவர் உறவின்முறையினர் நூற்றிருபது பேர்; மெராரியின் புதல்வருள் தலைவர் அசாயா, அவர் உறவின்முறையினர் இருநூற்றிருபது பேர்; கெர்சோம் புதல்வருள், தலைவர் யோவேல், அவன் உறவின்முறையினர் நூற்று முப்பது பேர்; எலிசாப்பான் புதல்வருள் தலைவர் செமாயா, அவர் உறவின்முறையினர் இருநூறு பேர்; எலிசாப்பான் புதல்வருள் தலைவர் எலியேல், அவர் உறவின்முறையினர் எண்பது பேர்; உசியேல் புதல்வருள் தலைவர் அம்மினதாபு, அவர் உறவின்முறையினர் நூற்றுப் பன்னிரண்டுபேர் ஆகியோரே உடன்படிக்கைப்பேழையை சுமக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2025, 12:01