இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா சிறப்புச் செய்தி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இன்றைய நாளில் உலகெங்கிலும் வாழும் வத்திக்கான் வானொலியின் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருநாள் நாள் சிறப்புச் செய்தியை வழங்குபவர் அருள்பணியாளர் S. அருளானந்து. தஞ்சை மறைமாவட்டத்தைச் சேர்ந்த தந்தை அவர்கள், தற்போது தச்சன்குறிச்சி புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தையாகப் பணியாற்றி வருகின்றார். இம்மறைமாவட்டத்தைச் சேர்ந்த தரங்கம்பாடி, சீர்காழி, சிதம்பரம், முத்தாண்டிப்பட்டி, பாதிரக்குடி, தண்டேஸ்வரநல்லூர் போன்ற இடங்களில் பங்குத் தந்தையாக சிறப்பாகப் பணிபுரிந்தவர். மேலும் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை பல்நோக்கு சமூகப் பணி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். சிறப்பாக, சிங்கப்பூரிலுள்ள தூய லூர்து அன்னை திருத்தலத்தில் தமிழ் மக்களின் ஆன்மிகக் குருவாக ஐந்தாண்டுகள் பணி செய்தவர். தந்தை அவர்கள் ஓர் எளிய அருள்பணியாளர் மற்றும் சீரிய சிந்தனையாளர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்