தேடுதல்

பெலிஸ்தியர்களை எதிர்த்துப் போரடிய வீரர்கள் பெலிஸ்தியர்களை எதிர்த்துப் போரடிய வீரர்கள் 

தடம் தந்த தகைமை – பெலிஸ்தியர் படையை முறியடித்த அரசர் தாவீது

கடவுள், “நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா. அம்மரங்களின் உச்சியில் படைசெல்வதன் இரைச்சல் கேட்கும் போது, உடனே போருக்குப் புறப்படு; ஏனெனில், பெலிஸ்தியரின் படையை முறியடிக்கக் கடவுள் உனக்கு முன் செல்கிறார்” என்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தாவீதும் அவர் ஆள்களும் பாகால் பெராசிமுக்கு வந்து, பிலிஸ்தியர்களை அங்கே முறியடித்தார். “வெள்ளம் அடித்துக் கொண்டு போவதுபோலக் கடவுள் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார்” என்றார் தாவீது. அதன் காரணமாக, அவ்விடத்திற்குப் ‘பாகால் பெராசிம்’ என்று பெயரிட்டனர். பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை அங்கு விட்டுச் சென்றிருந்தனர்; தாவீது கட்டளையிட, அவற்றைத் தீக்கிரையாக்கினர். பெலிஸ்தியர் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர். தாவீது திரும்பவும் கடவுளின் ஆலோசனையைக் கேட்டார்.

கடவுள், “நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா. அம்மரங்களின் உச்சியில் படைசெல்வதன் இரைச்சல் கேட்கும் போது, உடனே போருக்குப் புறப்படு; ஏனெனில், பெலிஸ்தியரின் படையை முறியடிக்கக் கடவுள் உனக்கு முன் செல்கிறார்” என்றார். கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார். கிபயோன் தொடங்கிக் கெசேர் வரை பெலிஸ்தியரின் படையை முறியடித்தனர். தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவியது; அனைத்து மக்களினங்களும் அவருக்கு அஞ்சி நடுங்கும்படி ஆண்டவர் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஏப்ரல் 2025, 10:20