இறை இரக்கத்தின் மேன்மையை எடுத்துரைத்த இன்னிசை நிகழ்ச்சி
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுளாக நம்மை அழைக்காத வரை இறை இரக்கத்திற்குள் யாரும் அழைக்கப்படுவதில்லை என்றும், கடவுள் நல்லவர் அன்பு மிக்கவர் என்பதை உலக மக்களுக்கு எடுத்துச்சொல்வதற்காகவும், இறை இரக்கத்தின் மேன்மையை எடுத்துரைப்பதற்காகவும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும் கூறினார் ஆயர் Jan Zając.
ஏப்ரல் 27, இறை இரக்க ஞாயிறை முன்னிட்டு போலந்து நாட்டின் Kraków’-வில் இயேசுவின் இறை இரக்கத்தை முன்னிட்டு புனித மரிய பவுஸ்தினா அவர்களின் வாழ்க்கையைத் தழுவி இயற்றிய பாடல்களை 16 மொழிகளில் பாடப்பட்டது என்றும், இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்த இந்த நிகழ்வில் இறை இரக்கத்தின் ஒளி எங்கும் பரவியது என்றும் எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் Jan Mrowca
கடவுளின் இரக்கம் உலகை ஒன்றிணைக்கின்றது என்று எடுத்துரைத்த Jan Mrowca அவர்கள், இந்நிகழ்விற்கு உரோம், பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், தன்சானியா, பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா போன்ற உலகின் பல பகுதிகளிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர் என்றும் எடுத்துரைத்தார்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரை நினைவுகூரும் விதமாகவும் நடைபெற்ற இறை இரக்கத்தின் பாடல்கள் நிகழ்ச்சியானது இறை இரக்கத்தின் சீடர்களாக மாற வழிவகுத்தது என்றும், கடவுளது அன்பையும் ஒளியையும் மக்கள் அனைவரும் ஒருவர் மற்றவருடன் பகிர்வதற்கான வாய்ப்பாக அமைந்தது என்றும் தெரிவித்தார் Jan Mrowca,.
தெர்ரா டிவினா மற்றும் தூய இரண்டாம் ஜான் பால் கலாச்சார உரையாடல் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியானது நல்ல முறையில் நடைபெற கடந்த பிப்ரவரி மாதம் இந்நிகழ்வின் தயாரிப்பாளர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து அவரது கையெழுத்துடன் கூடிய ஆசீரைப் பெற்றனர் என்றும் எடுத்துரைத்தார் Jan Mrowc.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்