தேடுதல்

JRSஆல் பராமரிக்கப்படும் அகதிகளுடன் திருத்தந்தை JRSஆல் பராமரிக்கப்படும் அகதிகளுடன் திருத்தந்தை 

வாழ்வில் கடைநிலையில் இருப்போருக்காக குரல் எழுப்பிய திருத்தந்தை

மனித சமுதாயத்தின் ஒரு பகுதியாக அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என குரலெழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனை வெறும் வார்த்தையாக அல்ல, மாறாக செயலில் காட்டினார் என்கிறது JRS பிறரன்பு அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பிரிவினைகளாலும் பாராமுகங்களாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டுவரும் இன்றைய உலகில் ஒற்றைக் குரலாக எழும்பி நின்றவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மட்டுமே என உரைத்தார் JRS என்ற அமைப்பின் பன்னாட்டு இயக்குனர், இயேசு சபை சகோதரர் Michael Schöpf.

JRS எனப்படும் அகதிகளுக்கான இயேசு சபை பணியகத்தின் பன்னாட்டு இயக்குனர் உரைக்கையில், தன் வாழ்நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புலம்பெயர்ந்தோருக்காகவும் அமைதிக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புபவராக இருந்தார் என சுட்டிக்காட்டினார்.

வாழ்வில் கடைநிலையில் இருப்போரின் மாண்பு மற்றும் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய தொலைநோக்கிற்கும் தூண்டுதலுக்கும் JRS இயேசு சபை அமைப்பு தன் நன்றியை வெளியிடுகிறது என எடுத்துரைத்தார்.

மனித சமுதாயத்தின் ஒரு பகுதியாக அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என குரலெழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனை வெறும் வார்த்தையாக அல்ல, மாறாக செயலில் காட்டினார் என்றார் இயேசு சபை சகோதரர் Schöpf.

பிறருக்கு செவிமடுப்பவராகவும், கலந்துரையாடலை ஊக்குவிப்பவராகவும் இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் அனைவரும் திறந்த மனதுடையவர்களாகவும், அமைதியை நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் இறைவனின் விருப்பத்தை தேடுபவர்களாகவும் இருக்க வேண்டும் என கற்பித்துச் சென்றுள்ளார் என மேலும் உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஏப்ரல் 2025, 15:29