கடந்த ஆண்டுகளில் கான்கிளேவில் பங்கேற்ற கர்தினால்கள் எண்ணிக்கை
மெரினா ராஜ் – வத்திக்கான்
கர்தினால்கள் அவையில் அதிகபட்சமாக 120 கர்தினால்கள் பங்கேற்க வேண்டும் என்ற வரைமுறை இருப்பினும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் 133 கர்தினால்கள் பங்கேற்க இருப்பது இதுவே முதன்முறையாகும்.
இதற்கு முன் நடைபெற்ற கான்கிளேவில் 1978 ஆம் ஆண்டில் 111 கர்தினால்களும், 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கான்கிளேவில், 115 கர்தினால்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற மே 7, புதன்கிழமை மாலை தொடங்க இருக்கும் கான்கிளேவ் அவையில் 135 கர்தினால்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு கர்தினால்கள் இதில் பங்கேற்க முடியாததால் 133 கர்தினால்களே புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கான்கிளேவில் பங்கேற்க உள்ளனர்.
கர்தினால்கள் அவையில் அதிகபட்சமாக 120 கர்தினால்கள் இருக்க வேண்டும் என்ற வரைமுறையானது திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் காலம் முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலம் வரை 16 முறை இந்த எண்ணிக்கையின் வரைமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது.
1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் நாள் “Romano Pontifici Eligendo” என்ற திருத்தந்தை தூய ஆறாம் பவுல் அவர்களின் ஆணையின்படி கான்கிளேவில் பங்கேற்கும் கர்தினால்களின் எண்ணிக்கையானது அதிகபட்சமாக 120 இருக்க வேண்டும் என்ற ஆணையினை வெளியிட்டார்.
ஏனெனில் இதற்கு முன்பு 1969 -ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற கான்கிளேவில் 134 கர்தினால்கள் பங்கேற்றனர்.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் தலைமைத்துவக் காலத்தில் Costituzione Apostolica Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்க சட்டஅமைப்பின்படி சில மாற்றங்களைக் கொணர்ந்தார்.
அவரது ஆட்சிக்காலத்தில் இந்த120 என்ற இந்த எண்ணிக்கையானது 4 முறை மீறப்பட்டது.
1) 1988 ஜூன் 28-ல் நடைபெற்ற கர்தினால்கள் அவையில்
வாக்களிக்கும் உரிமை பெற்ற கர்தினால்கள் 121, உரிமை இல்லாதவர்கள் 39 – மொத்தம் 160 கர்தினால்கள்
2) 1998 பிப்ரவரி 21 -ல் நடைபெற்ற கர்தினால்கள் அவையில்
வாக்களிக்கும் உரிமை பெற்ற கர்தினால்கள் 122, உரிமை இல்லாதவர்கள் 43 – மொத்தம் 165 கர்தினால்கள்
3) 2001 பிப்ரவரி 21 -ல்
வாக்களிக்கும் உரிமை பெற்ற கர்தினால்கள் 136, உரிமை இல்லாதவர்கள் 47 – மொத்தம் 183 கர்தினால்கள்
4) 2003 அக்டோபர் 21 -ல் வாக்களிக்கும் உரிமை பெற்ற கர்தினால்கள் 134, உரிமை இல்லாதவர்கள் 60 என மொத்தம் 194 கர்தினால்கள்
இறுதியாக திருத்தந்தைபுனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் மறைவைத் தொடர்ந்து
2005ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற கான்கிளேவில் பங்கேற்ற கர்தினால்களில் வாக்களிக்கும் உரிமை பெற்ற கர்தினால்கள் 117 பேர், உரிமை இல்லாதவர்கள் 66 பேர் என மொத்தம் 183 கர்தினால்கள் இருந்தனர்.
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் காலத்தில் இரண்டு முறை கர்தினால்கள் அவையின் எண்ணிக்கை அதிகரித்தது
5) 2010 நவம்பர் 20, 121 + 82 = 203
6) 2012 பிப்ரவரி 18, 125 + 88 = 213
இறுதியாக அவரது பணி நிறைவின் போது
2013 மார்ச் 12, நடைபெற்ற கான்கிளேவில்
117+ 90= 207
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைத்துவத்தின்போது 10 முறை நடைபெற்ற கர்தினால்கள் அவையில்,
7) 2014 பிப்ரவரி 22, 122 + 96 = 218
8) 2015 பிப்ரவரி 14, 125 + 102 = 227
9) 2016 நவம்பர் 19. 121 + 107 = 228
10) 2017 ஜூன் 28, 121 + 104 = 225
11) 2018 ஜூன் 28, 125 + 101 = 226
12) 2019 அக்டோபர் 5, 128 + 97 = 225
13) 2020 நவம்பர் 28, 128 + 101 = 229
14) 2022 ஆகஸ்ட் 27, 132 + 94 = 226
15) 2023 செப்டம்பர் 30, 137 + 105 = 242
16) 2024 டிசம்பர் 7, 140 + 113 = 253
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்