மாற்றுத்திறனாளிகளுக்கான இரு நாள் யூபிலிக் கொண்டாட்டங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஏற்கனவே திட்டமிட்டபடி மாற்றுத்திறனாளிகளுக்கான யூபிலிக் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 28ஆம் தேதி புனித பவுல் பெருங்கோவிலிலும், அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 29ஆம் தேதி புனித பேதுரு பெருங்கோவிலிலும் இடம்பெற்றன.
ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உள்ளூர் நேரம் 11 மணிக்குத் துவங்கிய மறைக்கல்வி சிந்தனைப் பகிர்வு நிகழ்வில் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் முன்னாள் இணைத்தலைவர் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் மறைக்கல்வி சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள பல மாற்றுத்திறானாளிகளும் அவர்களோடு பணிபுரிவோரும் தங்கள் சான்று பகர்வை ஏற்று நடத்தினர்.
இவ்வழிபாட்டு நிகழ்வுக்குப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் உழைப்பவர்களுக்கும், புனித பேதுரு வளாகத்திற்கு முன்னிருக்கும் வியா தெல்லா கொன்சிலான்சியோனே சாலைக்கு மறுமுனையில் இருக்கும், அதாவது வத்திக்கான் வானொலிக்கு முன்னால் இருக்கும் சான் காஸ்தல் ஆஞ்சலோ கட்டிட தோட்டத்தில் மதிய விருந்து வழங்கப்பட்டது.
அதன்பின் யூபிலிக் கொண்டாட்டங்கள் அத்தோட்டத்திலேயே திட்டமிடப்பட்டிருந்தன.
அதற்கு முன்னர் ஏப்ரல் 28, திங்கள்கிழமையன்று, புனித பவுல் பெருங்கோவில் புனிதக் கதவு வழியாகச் சென்ற மாற்றுத்திறனாளிகள், ஒப்புரவு அருள்சாதனத்தை அந்நாளில் பெற்றதுடன் திருநற்கருணை வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான யூபிலிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திங்களன்று மாலை பேராயர் பிசிக்கெல்லா அவர்களின் தலைமையில் புனித பவுல் பெருங்கோவிலில் திருப்பலியும் இடம்பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்