தேடுதல்

கர்தினால் மௌரொ கம்பெத்தி அவர்களால் நிறைவேற்றப்பட்ட ஏப்ரல் 29ன் திருப்பலி கர்தினால் மௌரொ கம்பெத்தி அவர்களால் நிறைவேற்றப்பட்ட ஏப்ரல் 29ன் திருப்பலி  (VATICAN MEDIA Divisione Foto)

ஒவ்வொருவரிலும் இறைவனைக் காண நாம் பழக வேண்டும்

நாம் நம் வாழ்வில் மற்றவர்களை சந்தித்தபோது அவர்களை கருணையுடன் நோக்கி அவர்களில் இறைவனைக் கண்டுகொண்டோமா என்ற கேள்வி இறுதி நாளில் நம்மை நோக்கி எழுப்பப்படும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அண்மையில் இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கண்டதுபொல், ஒவ்வொருவரிலும் இறைவனைக் காண நாம் பழக வேண்டும் என அனைத்து விசுவாசிகளுக்கும் அழைப்புவிடுத்தார் கர்தினால் மௌரொ கம்பெத்தி.

காலம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான ஒன்பது நாள் செபக்காலத்தின் நான்காம் நாள் திருப்பலியை ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமையன்று மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய கர்தினால் கம்பெத்தி அவர்கள், கிறிஸ்துவாகிய மனுமகன் முன்பு இந்த உலகம் முழுவதும் கூட்டப்படும்போது, நாம் நம் வாழ்வில் மற்றவர்களை சந்தித்தபோது அவர்களை கருணையுடன் நோக்கி அவர்களில் இறைவனைக் கண்டுகொண்டோமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறும் என உரைத்தார்.

மனிதனை கௌரவப்படுத்தும்போது, நாம் இறைவனைக் கௌரவப்படுத்துகின்றோம், அதேபோல் மனிதனை வெறுக்கிறவர் இறைவனை வெறுக்கிறார் என்ற வார்த்தைகளை எடுத்துரைத்த கர்தினால் கம்பெத்தி அவர்கள், இதுவே நற்செய்தியின் இதயமாக, திருஅவையின் இதயமாக, திருத்தந்தையில் காணப்பட்ட மனிதாபிமானமாக இருந்தது என்பதை மனதில் கொண்டு திருஅவை மேற்கொள்ளும் மறைப்பணியின் மையமாக கிறிஸ்தவ மனிதாபிமானம் இருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2025, 12:40