தேடுதல்

தேர்தல் இடம்பெறும் சிஸ்டைன் சிற்றாலயம் தேர்தல் இடம்பெறும் சிஸ்டைன் சிற்றாலயம்  (AFP or licensors)

வாக்களிக்கும் கர்தினால்களுள் 33 பேர் துறவுசபையினர்

மே 7ஆம் தேதி துவங்கும் புதிய திருத்தந்தைக்கான தேர்தலில் ஐந்து கண்டங்களிலிருந்து 71 நாடுகளின் 133 கர்தினால்கள் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மே மாதம் 7ஆம் தேதி துவங்கவிருக்கும் புதிய திருத்தந்தைக்கான தேர்தலில் ஐந்து கண்டங்களிலிருந்து 71 நாடுகளின் கர்தினால்கள் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதிற்குட்பட்ட கர்தினால்களுள் 135 பேரில் நான்கில் மூன்று பகுதியினர் திருத்தந்நை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள், அதாவது 108 பேர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களாலும், 22 பேர் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களாலும், 5 பேர் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களாலும் நியமிக்கப்பட்டவர்கள்.

வரலாற்றில் முதன்முறையாக தற்போது, ஹெய்ட்டி, கேப் வெர்தே, மத்திய ஆப்ரிக்க குடியரசு, பாப்புவா நியு கினி, மலேசியா, ஸ்வீடன், லக்ஸம்பர்க், கிழக்கு திமோர், சிங்கப்பூர், பரகுவாய், தென்சூடான், செர்பியா, மங்கோலியா ஆகிய 13 நாடுகளிலிருந்து கர்தினால்கள் திருத்தந்தைக்கான தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

திருத்தந்தையின் தேர்தலில் வாக்களிக்க உள்ள கர்தினால்களுள் 53 பேர் ஐரோப்பியக் கண்டத்தையும், அதிலும் 19 பேர் இத்தாலியையும், 37 பேர் அமெரிக்கக் கண்டத்தையும், 23 பேர் ஆசியாவையும், 18 பேர் ஆப்ரிக்காவையும், 4 பேர் ஒசியானியாவையும் சேர்ந்தவர்கள்.

தற்போது வாக்களிக்க உள்ள கர்தினால்களுள் 33 பேர் 18 துறவுசபைகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, 135 கர்தினால்களுள் இருவர் உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வரமுடியாத நிலையை வெளிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, தற்போது வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 133 ஆக குறைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2025, 12:45