தேடுதல்

வத்திக்கானுக்குள் வரும் கர்தினால்கள் வத்திக்கானுக்குள் வரும் கர்தினால்கள்  (ANSA)

திருஅவையின் தேர்தல் குறித்து கர்தினால்கள் அவை

ஒரு கர்தினால் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து, திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது என்பதையும் அறிவித்துள்ளது கர்தினால்கள் அவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த சில நாட்களாக தாங்கள் விவாதித்த இரு விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கர்தினால்கள் அவை.

1996ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்ட Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டங்களின் 33ஆம் எண்ணின்படி திருஅவையில் 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் 120 பேரே இருப்பர் என கூறப்பட்டிருந்தாலும், அதே அமைப்புமுறைச் சட்டத்தின் 36ஆம் எண்ணில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு இயைந்தவகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நியமனங்கள் இவ்வெண்ணிக்கையை தாண்டியுள்ளதையும் குறித்து கர்தினால்கள் விவாதித்துள்ளனர்.

ஒரு கர்தினால் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து, திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது என்பதையும் அறிவித்துள்ளனர் கர்தினால்கள்.

மேலும் இரண்டாவது கருத்தாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினால்கள் அவையிலிருந்து விலக்கப்பட்ட கர்தினால் ஜொவான்னி ஆஞ்சலோ பெச்சு அவர்கள், மறைந்த திருத்தந்தையின் முடிவுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் குழுவுடனான ஒன்றிப்புடனும், தேர்தல் அமைதியுடன் இடம்பெறவும், தான் இத்தேர்தலில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது குறித்தும் ஆயர்கள் விவாதித்துள்ளனர்.

இதற்காக கர்தினால்கள் அவை அவரைப் பாராட்டுவதாகவும் ஏப்ரல் 30 புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட கர்தினால்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2025, 13:03