தொழிலாளர் மற்றும் தொழில்முனைவோர்க்கான யூபிலி நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
யூபிலி ஆண்டு 2025 ஐ முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் சிறப்பு குழுக்களுக்கான யூபிலிகள் நடைபெற்று வந்த நிலையில் மே மாதம் 1 முதல்ம் 4 ஆம் தேதி வரை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான யூபிலி நாளானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மே 1, வியாழன் முதல் 4 திங்கள் கிழமை வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யூபிலியானது மே 4 திங்கள் கிழமை முதல் 5 செவ்வாய் வரைசிறப்பிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நாள்களில் உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகள் அனைவரும் யூபிலி ஆண்டின் நிறைபலனை பெறும்பொருட்டு பெருங்கோவில்களின் புனித கதவு வழியாக நுழைந்து செபித்து பலனடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பயணிகளாகிய நம் அனைவரின் மனங்களில் எதிர்நோக்கையும் நம்பிக்கையையும் விதைத்து யூபிலி ஆண்டினை பொருளுள்ள விதத்தில் நாம் பயன்படுத்துவதற்கான சிறப்புமிக்க தருணங்களாக யூபிலி நாள்கள் அமைகின்றன என்று நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறை அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்